தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வேலைக்காரன் படத்தையடுத்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் சீமராசா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சில காட்சிகளில் சிவகார்த்திகேயன் குண்டாக தோன்றுகிறார். இதற்காக சின்ன இடைவெளிவிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் தன் உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.ரவிக்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே 'டைம் மிஷின் கான்செப்ட்'டை மையமாக வைத்து எடுத்தார்.
தற்போது ரவிகுமார் இயக்கும் புதிய படமும் சயின்ஸ் பிக்ஷன் படம்தான். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும், இப்படம் 2019ஆம் ஆண்டு ரிலீஸாகும் எனவும் படத்துறையில் பேச்சு அடிபடுகிறது.
தனது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் மகிழ்ச்சியில் உள்ள சிவகார்த்திகேயன், தன் கனவு நிறைவேறிவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.