தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கீரவாணி. தெலுங்கிலும் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ராஜமவுலியின் பாகுபலி படத்திற்கு இசையமைத்து பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில், தற்போது ராம்கோபால்வர்மா இயக்கியுள்ள ஹாட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற அடல்ட் படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ராம்கோபால்வர்மா இயக்கிய க்ஷானா க்ஷானம் என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தார் கீரவாணி. அந்த படத்தில் வெங்கடேஷ்-ஸ்ரீதேவி நடித்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்துள்ளனர். ஹாலிவுட் நடிகை மியா மால்கோவா நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரில் கீரவாணியின் பெயர் இடம் பெற்றிருப்பதை அடுத்து பாகுபலி இசையமைப்பாளரா இந்த மாதிரி படத்திற்கு இசையமைக்கிறார் என பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.