ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
வசூலில் சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்! அப்படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார். இதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். இந்தப்படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மகாதேவ் என்பவர் இயக்குகிறார். விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.
இந்த படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது!