'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். பீமன் கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த தகவல் மலையாள ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம் கடந்த வருடம் தான் மோகன்லால் நடிப்பதாக 'மகாபாரதம்' என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது ஞாபகம் இருக்கலாம்.
இந்தப்படமே பீமன் கேரக்டரை மையப்படுத்தியது தான்.. அதில் மோகன்லால் தான் பீமன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அதனால் ஹாலிவுட்டில் இருந்து நடிகர் ஒருவர் விக்ரம் படத்தில் பீமனாக நடிக்க இருக்கிறார் என்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.