ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
திறமை இருந்தும் வெற்றி பெற முடியாத மலையாள வரவு நடிகைகளில் சுனு லட்சுமியும் ஒருவர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுனு லட்சுமி, சிரித்தால் ரசிப்பேன் என்ற படத்தில் 8 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனார். அதன் பிறகு செங்காத்து பூமியிலே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். எப்போதும் வென்றான், டூரிங் டாக்கீஸ் படங்களிலும் இரண்டாவது நாயகியாக நடித்தார். நயன்தாராவின் அறம் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த பிறகுதான் சுனு லட்சமி பற்றி ஓரளவுக்கு வெளியில் தெரிந்தது. அறம் படத்துக்கு முன்பே அவர் ஹீரோயினாக நடித்த படம் தான் சாவி.
இதில் பிரகாஷ் சந்திராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளயம் படங்களில் நடித்தவர். ஆர்.சுப்பிரமணியன் என்பவர் இயக்கி உள்ளார். சதீஷ் தாயன்பன் இசை அமைத்துள்ளார், சங்கர்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இந்தவாரம் வெளிவருகிறது.
மதுரை வாழ் இளைஞனின் கதை. இதில் சுனு லட்சுமி மதுரை பெண்ணாக நடித்துள்ளார். சுனுலட்சுமியின் ஹீரோயின் கதவை சாவி திறக்குமா என்பது ஓரிரு நாளில் தெரியும்.