தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கிய இந்த படத்தில் சினேகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டர் கதைக்கு முக்கியமானதாக இருந்தபோதும் தான் ஏமாற்றப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் சினேகா.
அதுபற்றி சினேகா கூறுகையில், இந்த வேலைக்கரன் படத்தில் 18நாட்கள் நடித்தேன். எனது கேரக்டர் படத்தில் 15நிமிடங்கள் வரும் என்றுதான் முதலில் இயக்குனர் சொன்னார். ஆனால் படம் திரைக்கு வந்தபோது நான் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லாமல், வெறும் ஐந்து நிமிட காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து அதிச்சியடைந்து விட்டேன்.
மேலும், குழந்தை பிறந்த பிறகு வெயிட் குறைப்பதென்பது சாதாரணமான விசயமல்ல. ஆனால் நான் 3மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் 7கிலோ வெயிட் குறைத்து கஷ்டப்பட்டு நடித்தேன். அதனால் எனது கேரக்டர் படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார் சினேகா.