இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒருநாள் கூத்து உட்பட பல படங்களைத் தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரித்த படம் 'உள்குத்து. கார்த்திக் ராஜு இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், நந்திதா நடித்துள்ள இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் ஏற்கெனவே பல தடவை ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டன. நிதி சிக்கலில் சிக்கியிருந்த உள்குத்து தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார், இப்போது பல பிரச்னைகளை கடந்து இன்னொருவருர் மூலமாக வருகிற 29-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்.
இதே நிதி பிரச்சனையால் 'கெனன்யா ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள மற்றுறொரு படமான 'சர்வர் சுந்தரம்' படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
உள்குத்து வெளிவந்து அதன் ரிசல்ட்டை பொறுத்தே, தயாரிப்பாளர் சர்வர் சுந்தரம் பட ரிலீஸ் பற்றி அறிவிப்பார் என தெரிகிறது.