ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'மெர்சல்' படம் வெளிவந்து கடும் சர்ச்சையை எழுப்பி மிகப் பெரும் வசூலை ஈட்டியது. விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்று பெயரைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் வெளிவந்த படங்களில் 'மெர்சல்' படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ரசிக்கப்பட்டன. அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் விஎப்எக்ஸ் காட்சிகளாகவும் அமைக்கப்பட்டன. குறிப்பாக இரட்டை வேட விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பயன்படுத்தப்பட்டவை சிறிதும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருந்தன.
'மெர்சல்' படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளின் உருவாக்க வீடியோ ஒன்று நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. படத்தில் எந்த அளவிற்கு அந்தக் காட்சிகள் மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது அந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது. எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்களுக்கும் சவால் விடும் அளவிற்கு தமிழ்ப் படங்களில் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் அமையப் போகிறது என்பதற்கு இந்த 'மெர்சல்' வீடியோவும் ஒரு உதாரணம்.
வீடியோ லிங்க் : https://youtu.be/U3ahiCSciYE