‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் இன்னொரு இந்தி நடிகர் விவேக் ஓபராய். இவர்கள் இருவருமே தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடிக்கிறார்கள்.
இதில், நீல்நிதின் முகேஷ் பிரபாஸின் சாஹோ படத்திலும் வில்லனாகவே நடிக்கிறார். இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது விவேக் ஓபராயும் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இவர்கள் தவிர இந்த சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உள்பட மேலும் சில பாலிவுட் நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள்.