ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இப்படை வெல்லும் படத்திற்கு பிறகு உதயநிதியின் நம்பிக்கை நிமிர் படம். பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி நடிக்கும் 'நிமிர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
'மகேஷின்டெ பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இருவரும் இசை அமைக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாf உள்ள நிமிர் படத்தில் இடம் பெறும் 'நெஞ்சில் மாமழை...' என்று துவங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். அடுத்த மாதம் 'நிமிர்' படம் வெளியாகிறது.