பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெங்களூரைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு காயத்ரி. கிருஷ்ணா இயக்கிய ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு அவர் நடித்த 18 வயசு படம் வெற்றி பெறவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தாலும் அவரை வெளிப்படுத்தியது. அதன் பிறகு காயத்ரி நடித்த பொன்மாலை பொழுது, மத்தாப்பூ, ரம்மி, உலா என எந்த படமும் அவருக்கு உதவில்லை.
புரியாத புதிர் படத்தை மிகவும் எதிர்பார்த்தார். இரண்டு வருடம் அந்த படம் தாமதமாக வெளிவந்தது என்றாலும் அதற்காக காத்திருந்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. தற்போது சீதக்காதி, அநீதி கதைகள் படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றுடன் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடிப்பதுடன், இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார். இதுவரை யாரும் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். படக் குழுவினரும், காயத்ரிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் செய்து வருகிறார்கள். நல்ல நாள் காயத்ரிக்கு வருமா என்பது படம் வந்ததும் தெரியும்.