வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக். அந்த படத்தில் தேவயானி நடித்த வேடத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் அழைத்திருக்கிறார் சித்திக். ஆனால் அந்த சமயத்தில் மீனா வேறு சில படங்களில் பிசியாக இருந்ததினால் நடிக்கவில்லையாம்.
ஆனால், அதன்பிறகும் சித்திக் இயக்கத்தில் மீனா நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ஆனபோதும், தற்போது மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் சித்திக் இயக்கியுள்ள படத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி மீனா கூறும்போது, பிரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது என் மகள் அவரது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானே சித்திக் படத்தில் நடித்தது போன்று பீல் பண்ணுகிறேன் என்கிறார் மீனா.