'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடிக்கும் ஹீரோ யார் என்றால்... அது விஜய்சேதுபதிதான். விஜய்சேதுபதிக்கு அடுத்த வருடத்திலும் 10 படங்களுக்கு மேல் கைவசம் இருக்கின்றன. அவற்றில் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதையடுத்து, விஜய்சேதுபதி மூன்றுவிதமான தோற்றங்களில் நடிக்கும் '96' திரைப்படம் வெளியாகிறது.
'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் '96' படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். த்ரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
கத்திசண்டை படத்தை அடுத்து மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வரும் '96' படத்தின் தமிழக விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. 96 படத்தை 2018 பிப்ரவரியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.
இதுதவிர சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, இடம் பொருள் ஏவல், சயீரா நரசிம்ம ரெட்டி, ஜூங்கா போன்ற படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.