Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த வாரப் போட்டியில் 9 படங்கள், தியேட்டர்கள் கிடைக்குமா ?

12 டிச, 2017 - 18:42 IST
எழுத்தின் அளவு:
This-Week-9-movie-releasing

2017ம் ஆண்டின் கடைசி மாதத்தின் கடைசி பரபரப்பில் இருக்கிறது தமிழ்த் திரையுலகம். ஒவ்வொரு ஆண்டும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் தேதியைப் பொறுத்தே தமிழ்நாடு அரசாங்கத்தின் மானியம் கிடைக்கப் பெறும். அதனால், டிசம்பர் மாதத்தில் குறைந்த அளவில் தியேட்டர்கள் கிடைத்தால் கூட, மேலும் தாமதிக்காமல் படத்தை வெளியிட்டு விடுவார்கள். ஆனாலும், கடந்த ஏழு வருடங்களுக்கான சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியத் தொகை பற்றிய அறிவிப்பும் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் போட்டியிட்டதால், எங்கே அந்த மானியத் தொகையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் பல தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக சர்ச்சைகளையும் எழுப்பினார்கள்.

இந்த வாரம் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மொத்தம் 9 படங்கள் வெளியாகின்றன. கடந்த வாரம் வரை 7 படங்கள் மட்டுமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 படங்கள் அந்தப் போட்டியில் குதித்துள்ளன. இந்த வாரத்தில் வெளிவரும் படங்களைப் பற்றிய சிறிய தகவல்கள்.

மாயவன்
இயக்கம் - சி.வி.குமார்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, லாவண்யா திரிபாதி

அருவி
இயக்கம் - அருண் பிரபு புருஷோத்தமன்
இசை - பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ்
நடிப்பு - அதிதி பாலன், அஞ்சலி வரதன்

பிரம்மா.காம்
இயக்கம் - புருஷ் விஜயகுமார்
இசை - சித்தார்த் விபின்
நடிப்பு - நகுல், சித்தார்த் விபின், ஆஷ்னா சவேரி

சென்னை 2 சிங்கப்பூர்
இயக்கம் - அப்பாஸ் அக்பர்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன்

இமை
இயக்கம் - விஜய் கே மோகன்
இசை - மிக்கு கவில், ஆதீப்
நடிப்பு - சரிஷ், அட்சயப்ரியா

கிடா விருந்து
இயக்கம் - தமிழ்செல்வன்
இசை - பிரின்ஸ் நல்லதம்பி
நடிப்பு - எஸ்.பி.பிரசாத், ஷாலினி

பள்ளிப் பருவத்திலே
இயக்கம் - வாசுதேவ் பாஸ்கர்
இசை - விஜய் நாராயணன்
நடிப்பு - நந்தன்ராம், வெண்பா

வீரா
இயக்கம் - ராஜாராமன்
இசை - லியோன் ஜேம்ஸ்
நடிப்பு - கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன்

கடந்த வாரங்களில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று, திருட்டுப் பயலே, அண்ணாதுரை, கொடி வீரன், ரிச்சி, சத்யா ஆகிய படங்கள் ஏற்கெனவே தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த வாரம் 9 படங்கள் வர இருப்பதால் இந்தப் படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இப்படி ஒரே சமயத்தில் இத்தனை படங்கள் வெளிவருவதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் எந்தவித முயற்சிகளையும் இன்னும் எடுக்கவில்லை என சிறிய தயாரிப்பாளர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்திற்கும், திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பிற்கும் இடையே இருக்கும் மோதலே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in