கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
நகுல் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கிற படம் பிரம்மா.காம். இதனை புதுமுக இயக்குனர் புருஷ் விஜய் இயக்கி உள்ளார். மெலீனா கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில் நகுல் ஜோடியாக ஆஸ்னா ஜவேரி நடித்துள்ளார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின், கவுசல்யா, ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வருகிற 15-ந் தேதி படம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் விஜய் கூறியதாவது:
எல்லோரும் கடவுளிடம் எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மை படைத்த கடவுளுக்கு தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. இதுதான் கதை. கே.பாக்யராஜ் கடவுளாக நடித்திருக்கிறார். கடவுள் என்றால் கிரீடம் எல்லாம் வைத்திருக்க மாட்டார், சாதாரண மனிதன் அவதாரத்திலேயே வருவார். அவரிடம் எதையாவது கேட்டு தொல்லை செய்யும் மனிதனாக நகுல் நடித்திருக்கிறார்.
நகுல் ஒரு விளம்பர பட இயக்குனர். ஆஸ்னா ஜவேரி ஒரு மாடல் அழகி. ஆஸ்னாவை விளம்பர கம்பெனி நிர்வாகி சித்தார்த் விபினும், நகுலும் காதலிக்கிறார்கள். இப்படி ஜாலியா போகிற கதை. நீது சந்திரா படத்திலும் நடிகை நீது சந்திராவாகவே நடித்துள்ளார். ஒரு கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். முழுநீள காமெடி படமாக இருந்தாலும் சிந்திக்க நிறைய விஷயத்தை தருகிற படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் விஜய்.