ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கபாலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்துள்ளார் ரஜினி. மும்பை தாராவியில் வாழ்ந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. அதனால் காலா படத்தை கோடை விடு முறையில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால், காலாவிற்கு முன்பே ரஜினி நடித்து வந்த 2.ஓ படம் தற்போது ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரலுக்கு தள்ளிப்போயிருப்பதால், காலா படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடுகிறார்கள்.
மேலும், ரஜினி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்த நிலையில், கபாலி படத்திற்கு சந்தோஷ்நாராய ணன் இசையமைத்தார். அவரது இசையில் உருவான நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதனால் காலா படத்திற்கும் இசைய மைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார் சந்தோஷ்நாராயணன். அதோடு, காலா படத்திலும் நெருப்புடா பாடல் பாணியில் ஒரு அதிரடியான பாடலை உருவாக்கியிருக்கிறாராம் சந்தோஷ்நாராயணன். இந்த பாடல் நெருப்புடாவை மிஞ்சும் வகையில் பெரிய ஹிட்டாகும் என்று காலா படக்குழுவினர் சொல்கிறார்கள்.