மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதையடுத்து, தற்போது சிபிராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சத்யா படத்தை இயக்கியிருக்கிறார். இதன்பிறகு அவர், நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.
கடந்த ஆண்டு பவன்குமார் இயக்கத்தில், கன்னடத்தில் வெளியான படம் யுடர்ன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான அந்த படம் சூப்பர் ஹிட்டானது. விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக, நிருபர் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஆக, அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாரா, இந்த படத்தில் பத்திரிகையாளராக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே தலைமகன் படத்தில் நயன்தாரா நிருபராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.