தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2010ம் ஆண்டு வெளிவந்து பரபரப்பு கிளப்பிய படம் தமிழ்படம். தமிழ் சினிமாவையும், முன்னணி ஹீரோக்களையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றதோடு நல்ல வசூலையும் கொடுத்தது. அறிமுக இயக்குனர் அமுதன் இயக்கிய இந்தப் படத்தில் சிவா, திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஒய்நாட் சசி தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அதன்பிறகு ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார் அது வெளிவரவில்லை. இந்த நிலையில் தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதல்பாகத்தை தயாரித்த சசி இதையும் தயாரிக்கிறார். சிவா மீண்டும் நடிக்கிறார், ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. வருகிற 11ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.