இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63) உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் நேற்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக ஐதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச., 5) மதியம் காலமானார்.
அமரன், நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இதுதவிர ஏராளமான ரீ-மிக்ஸ் ஆல்பங்களையும் பாப் பாடல்களையும் பாடியிருக்கிறார். ஜெயா டிவியில் ஆதித்யனின் கிச்சன் என்ற சமையல் நிகழ்ச்சியை 8 எட்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி உள்ளார்.
ஆதித்யனின் இயர்பெயர் டைட்டஸ். இவருக்கு சோபியா என்ற மனைவியும், ஷரோன், பிராத்தனா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டனர்.
ஆதித்யனின் உடல் ஐதராபாத்திலிருந்து நாளை(டிச., 7) சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது. மதியத்திற்கு மேல் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.