ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படம் வருகிற டிச., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படமும் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் உடன் போட்டியிடவில்லை என சந்தானம் தெரிவித்துள்ளார்.
சக்க போடு போடு ராஜா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் சந்தானம் பேசும்போது, சிவகார்த்திகேயன் உடன் போட்டியில்லை, அப்படியே இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருக்கும். என்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை, நான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்வது பெருமை. இப்போது எல்லாம் அரிவாளை படத்தில் காண்பித்தால் கூட யு/ஏ சான்று தந்துவிடுகிறார்கள் என்றார்.
சக்க போடு போடு ராஜாவிற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று அளித்துள்ளது. படத்தில் சண்டைக்காட்சி உட்பட வன்முறை அதிகமாக இருப்பதாக யு/ஏ சான்று அளித்துள்ளனர்.