ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடியனாக நடித்து ஹீரோவாகி விட்ட சந்தானம், தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் மூன்று படங்கள் ரிலீசுக்கு எப்போதோ தயாராகி விட்டன. இதில் சக்க போடு போடு ராஜா படத்திற்கு சந்தானத்தின் ஹாட் பாதரான சிம்பு இசையமைத்துள்ளார். அதனால் இந்த படத்தின் பாடல்களுக்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் ரீச் ஆனது. அதையடுத்து இசை வெளியீடு வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. அதோடு, முன்னணி நடிகைகளுடன் டூயட் பாட வேண்டும் என்கிற ஆசை சந்தானத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் அவர் காமெடியனாக நடித்தவர் என்பதால் முன்னணி நடிகைகள் அவருடன் டூயட் பாட சம்மதிக்கவில்லை.
அதன் காரணமாகத்தான் சந்தானம் நடிக்கும் படங்களில் புதுமுகங்களாக நடித்து வருகிறார்கள். ஆனால் இப்படி தமிழ் சினிமா நடிகைகள் தன்னுடன் நடிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், சந்தானமோ, இந்தி நடிகை தீபிகா படுகோனேவுடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எனக்கு இந்தி நடிகை தீபிகா படுகோனே ரொம்ப பிடிக்கும். நல்ல நடிகை அவர். அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.