கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவின் பாலி. 'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தவர். சென்னையில் ஒரு வருடத்தைக் கடந்து ஓடியது அந்தப் படம்.
தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வரும் ஒரு ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி, தமிழ் மீடியாக்களை மதிப்பதில் மட்டும் தயக்கம் காட்டுகிறார். மலையாள நிருபராகத் தேடிப் பார்த்து அவர்களுக்காகவே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் என தமிழ் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். சமீபத்தில் 'ரிச்சி' படத்தின் பிரமோஷனுக்காக வந்தவர் மலையாள நிருபர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்கியுள்ளார். பல தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி எடுக்க முடியாமல் திரும்பியுள்ளார்கள்.
நடிப்பது தமிழ்ப் படத்தில், ஆனால், பேட்டி கொடுப்பதற்கு மட்டும் மலையாள நிருபர்களா என வந்த பத்திரிகையாளர்கள் பலரும் சண்டை போட, அவை எதையும் காதில் வாங்காத நிவின் பாலி, அவசரமாக விமானத்தைப் பிடிக்கப் போய்விட்டார் என்று படக்குழுவினரும் பொய் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு நிவின்பாலி தமிழில் நேரடியாக நடிக்கும் 'ரிச்சி' படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்கும் 'சதுரங்க வேட்டை' நட்ராஜ், படத்தின் டீசரிலும், பிரமோஷன்களிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டது ஏன் என்பதை படக்குழுவினர் தெரிவிப்பார்களா ?. அந்தப் பிரச்சனைக்கும் நிவின்பாலிக்கும் சம்பந்தமில்லையா...?.