டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்". ஆறுமுககுமார் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலகம், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். 7சி எண்டர்டெயின்மெண்ட், அம்மா நாராயணா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சீதையை கடத்திய ராவணன் கெட்டவனா, சீதையை தீயில் இறங்கச் சொன்ன ராமன் கெட்டவனா என்ற கேள்வியை எழுப்பும் டீசர், ராமனும் நான் தான், ராவணனும் நான் தான் என்று விஜய் சேதுபதி பதில் சொல்வதோடு முடிகிறது. ஒரு நிமிடம் 14 விநாடிகள் ஓடும் டீசரில் விஜய் சேதுபதி பல கெட் அப்களில் தோன்றுகிறார். அவர் பல கெட் அப்பளில் நடிக்கும் முதல் படம் இது.