தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அந்த காலத்தின் பிரமாண்ட தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், பாலிவுட்டில் தயாரித்த படம் ஹாத்தி மேரா சாத்தி. விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் கில்லாடியான அவர் 5 யானைகளுக்கும், ஒரு இளைஞனுக்குமான அன்பை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை தயாரித்தார்.
எம்.ஏ.திருமுகம் இயக்கினார். லட்சுமிகாந்த் பியாரிலால் இசை அமைத்தார். ராஜேஷ் கண்ணா, தனுஜா நடித்திருந்தார்கள். இந்தப் படம் பாலிவுட்டில் வெள்ளி விழா கொண்டாடியது. இதே படத்தை தமிழில் நல்ல நேரம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். சூப்பர் ஹிட் பாடல்களுடன் இங்கும் படம் வெள்ளிவிழா கொண்டாடியது.
இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்ய இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராக இருக்கிறது. எம்.ஜி.ஆர், ராஜேஷ் கண்ணா நடித்த கேரக்டரில் ராணா நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைள் தேர்வு நடந்து வருகிறது. காலத்துக்கு ஏற்ற மாதிரி சில மாறுதல்களுடன் படத்தை தயாரிக்க இருக்கிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து காடுகளில் யானைகளுடன் நடக்கிறது. "பிரபுசாலமன் இயக்கிய கும்கி படம் தான் நல்ல நேரம் படத்தை ரீமேக் செய்யும் உத்வேகத்தை கொடுத்துள்ளது" என்று ராணா தெரிவித்திருக்கிறார்.