‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தொடர்ந்து கிராமப்புற கதைகளாக தேர்வு செய்து நடித்தால், தனக்கு கிராம ராஜன் என பெயர் வந்துவிடுமோ என, பயந்து போன விமல், நகர்ப்புற கதைகளை தேர்வு செய்து நடித்தார்; அந்த படங்களும் சரியாக போகவில்லை. இதனால், முதலுக்கே மோசம் வந்து விடுமோ என பயந்த அவர், கிராமம் பிளஸ் நகர்ப்புறத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை, தற்போது, தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மன்னர் வகையறா படமும், இதில் அடங்கும். இதில், சட்டக் கல்லுாரி மாணவராக, விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பது, கயல் ஆனந்தி. 'அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் குடும்பப் படமிது. கண்டிப்பாக, விமலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும்' என்கிறது, படக்குழு.