ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமராஜர் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் கக்கன். எளிமையின் சிகரமாக இருந்த அவருக்கு உதவ வேண்டும் என்று சினிமாவில் டாப் நடிகராக இருந்தாலும் நாடகத்தில் நடித்து அதில் திரட்டப்பட்ட நிதியை கக்கனுக்கு வழங்கினார் சிவாஜி.
70-களின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய சிவாஜி, அதற்காக, சென்னைக்கு வெளியே தங்கபதக்கம் நாடகத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
நாடகத்துக்கு காமராஜர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவரைச் சந்தித்து நாடகத்துக்கு அழைத்தார் சிவாஜி. பொதுவாக இதுபோன்ற விழாக்களுக்கு செல்லாத காமராஜர் நடக்கும் நாடகம் கக்கனுக்காக என்பதாலும், அழைப்பது சிவாஜி என்பதாலும் சம்மதித்தார்.
நாடகத்துக்கான மொத்தச் செலவையும் சிவாஜியே ஏற்றுக் கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. சிவாஜியின் இந்த சேவையைப் பாராட்டி அவருக்கு காமராஜர் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார்.
அந்தப்பதக்கத்தையும் சிவாஜி அதே விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் சிவாஜி.