ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக செய்திகள் வெளியானபோதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
விஸ்வாசம் பேமிலி செண்டிமென்ட் கதையில் உருவாகும் நிலையில், ஹீரோயினாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளும் நாயகி பட்டியலில் இருக்கிறார்களாம். ஆனாலும், கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முதலிடம் என படக்குழு வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.