தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தொழிலதிபர். இவர் சில படங்களை தயாரித்திருக்கிறார். தற்போது நடிகராகி விட்டார். மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் தமிழில் ராதாரவி நடித்த வேடத்தில் ஜி.கே.ரெட்டிதான் நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது சில படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் நிவின்பாலி நடித்துள்ள ரிச்சி படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
மேலும், ஜி.கே.ரெட்டிக்கு நடிப்பதற்கு முதலில் வாய்ப்பு வந்தபோது, தனது மகன் விஷாலிடம் நடிக்கவா? வேண்டாமா? என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவர், நல்ல வாய்ப்பு வந்தால் நடிங்க டாடி என்று சொன்ன பிறகுதான் பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்ததாக சொல்லும் ஜி.கே.ரெட்டி, இப்போது எனக்கு 79 வயது ஆகிறது. ஆனாலும் நான் நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்கிறேன். காரணம் உடற்பயிற்சி, டயட்ஸ் என்று உடம்பை சரியாக பராமரித்து வருகிறேன் என்கிறார் ஜி.கே.ரெட்டி.