அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
யு டியூபில் திரைப்படங்களின் டீசர், டிரைலர் பதிவேற்றப்பட்ட பிறகு கடந்த சில வருடங்களாக அவை என்னென்ன சாதனைகளைப் படைக்கிறது என்பதில் அந்தந்த ரசிகர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' டீசர் வெளிவந்து புதிய சாதனையைப் படைத்தது. அதன் பின் அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' டீசர் அந்த சாதனையை முறியடித்தது. அடுத்து விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' டீசர் அதையும் முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது. இந்த கணக்குகள் எல்லாம் அந்தந்த டீசருக்கான 'லைக்' கணக்குகள்.
இருந்தாலும் 'கபாலி' டீசரின் 'பார்வை' சாதனையை 'விவேகம்' டீசரால் முறியடிக்கவில்லை. 'மெர்சல்' டீசராலும் ஆரம்பத்தில் முறியடிக்க முடியாமல் இருந்தது. இப்போது படம் வெளிவந்து 30 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 'கபாலி' டீசரின் பார்வை எண்ணிக்கையையும் 'மெர்சல்' டீசர் முறியடித்து விட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
யு டியுபில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் எண்ணிக்கையில் 'மெர்சல்' டீசர்தான் தற்போது நம்பர் 1. ஏற்கெனவே 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற இந்த டீசர் 'கபாலி' டீசரின் 3 கோடியே 45 லட்சம் பார்வைகளைக் கடந்து தற்போது 3 கோடியே 47 லட்சம் பார்வைகளைப் பெற்று தனி சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையை அடுத்து முறியடிக்கப் போகும் டீசர் எது என்பதற்கு நாம் சில மாதம் காத்திருக்க வேண்டும்.