ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு இசையமைப்பாளராக அனிருத்துக்கு அடையாளம் தந்து வளர்த்துவிட்டவர் தனுஷ். ஆனால் இடையில் 'பீப் பாடல் உள்ளிட்ட சில கசப்பான நிகழ்வுகளால் அனிருத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தனுஷ், தனது படங்களுக்கு ஷான் ரோல்டனை தொடர்ந்து இசையமைக்க வைத்தார். இதனால் எதிர்காலத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைய வாய்ப்பில்லையோ என்கிற சந்தேகம் இப்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இவர்கள் கூட்டணியில் உருவாகி பிரபலமான 'கொலைவெறி' பாடல் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை டுவிட்டரில் நினைவுகூர்ந்த தனுஷ், அதில் அனிருத்தின் பங்கும் நிறைய இருந்தது என கூறி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
பதிலுக்கு அனிருத்தும், “அது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது ப்ரோ.. என்னைவிட அதிகமாக என்னை நம்பியது நீங்கள் தான்.. நன்றி” என பதில் அளித்துள்ளார்.
இதன்மூலம், இனிவரும் நாட்களில் இந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என நம்பலாம்.. சினிமாவில் எது தான் சாத்தியமில்லை..?