இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து, பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. டிசம்பரில் தொடங்குவதாக இருந்த சங்கமித்ரா படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு முன்னதாக கலகலப்பு 2 படம் இயக்க திட்டமிட்ட சுந்தர்.சி, அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
காரைக்குடியில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடர உள்ளது.
ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலை கொடுத்து தனியார் டிவி வாங்கியுள்ளது.
கலகலப்பு- 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் டிசம்பருக்குள் முடித்து பொங்கலுக்கு வெளியிட சுந்தர்.சி. முடிவு செய்திருக்கிறார்.