இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாதுரை. அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், ஜுவல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பாரதியின் பாடல் வரிகளில் அண்ணாதுரை உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.
இதன் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தையும் விஜய்ஆண்டனி டாட் காம் http://www.vijayantony.com/ என்ற இணையதள முகவரியில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரிஜினல் தரத்துடன் கிடைக்கும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு முன்னணி இசை அமைப்பாளரிள் அனைத்து பாடல்களும் இலவசம் என்பது இதுவே முதல் முறையாகும். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.