விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூஜாகுமார். அந்த படங்களில் சிறப்பாக நடித்தபோதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் வெளியான கருட வேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜாகுமார்.
அதோடு, தொடர்ந்து அவர் மனைவி கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து கேள்விகள் எழுந்தபோது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உணர்ந்து செய்ய தயாராக இருக்கிறேன். இந்த மாதிரி வேடங்கள் எனக்கு மனநிறைவையே தருகின்றனர் என்று கூறியிருந்தார் பூஜாகுமார்.
இந்தநிலையில், கருடவேகா படத்தில் பூஜாகுமாரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். அந்தவகையில், பாகுபலி நாயகன் பிரபாஸின் தாயாரான சிவகுமாரி, பூஜாகுமாரின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறாராம். அதையடுத்து தனது டுவிட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பூஜாகுமார்.