பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கியவர் சிறுத்தை சிவா. இதில் வீரம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விவேகம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த படம் வெளியானபோது அடுத்தபடியாக அஜித் சிவா கூட்டணியில் இருந்து விலகி வேறு இயக்குனரின் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது மீண்டும் சிவா இயக்கத்திலேயே அஜித் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதோடு அஜித்தின் 58வது படத்திற்கான கதை விவாதத்திலும் சிவா ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதோடு அந்த படம் விவேகம் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவாவின் இணைய பக்கத்திற்குள் செல்லும் அஜித் ரசிகர்களோ, விவேகம்-2 வேண்டாம், வீரம்-2வை இயக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்களாம். அதோடு, வீரம் படமே தங்களை அதிகமாக கவர்ந்த படம் என்றும் கூறி வருகிறார்கள். இதுகுறித்து, அஜித்துடன் சிவா விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.