இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கமலுக்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பல வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது - 'விஸ்வரூபம்-2'. பின்னர் ஆஸ்கார் ரவிக்கு செட்டில் பண்ணிவிட்டு லைகா மூலம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கமல் என்று சொல்லப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'விஸ்வரூபம்-2' பட வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 'விஸ்வரூபம்-2' மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'விஸ்வரூபம்-2' படத்தை லைகா வெளியிடும் பட்சம் 2.0 வெளியான சில வாரங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்புள்ளது. 'விஸ்வரூபம்-2' படம் வெளியானதும் 'சபாஷ் நாயுடு' படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன்-2' படவேலைகளில் களமிறங்கவிருக்கிறார் கமல்ஹாசன்.