துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கர்நாடக மாநில அரசால் வழங்கப்படும் ராஜ்யோத்சவா விருது உயரிய விருதாகும். பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாட மாநிலம் உருவாகி 62 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த 62 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது.
இதில் திரைப்படத்துறையிலிருந்து பழம்பெரும் நடிகை காஞ்சனாவும், பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாசும் இந்த விருதை பெற்றார்கள். பெங்களூவில் உள்ள ரவீந்திரா கலாஷேத்திராவில் நடந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா இந்த விருதுகளை வழங்கினார்.
கர்நாடக கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உமாஜி விருது பெறுகிறவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு முதல்வர் சித்தராமய்யா ஒரு லட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான காஞ்சனா, தமிழ், மற்றும் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸ் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.