'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுக இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் இயக்கும் படம் சீமத்துரை. புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். கீதன் என்ற புதுமுகத்துடன் வர்ஷா நடிக்கிறார். இவர்கள் தவிர விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், காசி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜோஸ் பிராங்ளின் இசை அமைக்கிறார். டி.திருஞான சம்பந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் கூறியதாவது:
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம். அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.
வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் சீமத்துரை. என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.