ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் - 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சிறுத்தை' படத்திற்குப் பிறகு இப்படத்திலும் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். தொடர் மழையால் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு சம்பிரதாயமாக நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குநர் வினோத், பத்திரிகையாளர்கள் பற்றி தப்பான கருத்தைச் சொல்ல, அதனால் டென்ஷனான சில பத்திரிகையாளர்கள் அவரை கேள்வியால் வறுத்தெடுத்தனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 17ஆம் தேதி உலகமெங்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் ரிலீஸாகிறது. அதேநாளில் காக்கி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது. கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் 'தீரன்' படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.