ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நகைச்சுவை நடிகர் சூரி, மதுரையில் துவக்கியுள்ள புதிய ஹோட்டலை, நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். அதேப்போன்று நடிகர் சூரியும் ஹோட்டல் தொழில் இறங்கியுள்ளார்.
மதுரை, காமராஜர் சாலையில் அம்மன் என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் கட்டியுள்ளார். இதை தனது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் திறந்து வைக்க ஆசைப்பட்டார். அதன்படி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன், சூரிக்காக மதுரை கிளம்பி வந்து அவரது ஹோட்டலை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஆர்கே.சுரேஷூம் பங்கேற்றார்.
சிவகார்த்திகேயன் வருகையால் அவரை காண ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.