ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. 'தெறி' படத்திற்குப் பிறகு 'பைரவா, மெர்சல்' ஆகிய படங்கள் வந்தாலும் இசை ரசிகர்கள் 'தெறி' படத்தின் பாடலை இன்னும் யு டியூபில் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி, ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி பாடி இடம் பெற்ற பாடலான 'என் ஜீவன்...' பாடல் தற்போது 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களைக் காட்டிலும் இந்தப் பாடல் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'தெறி' படத்தின் மற்ற பாடல்களான 'ராங்கு..' பாடல் 14 லட்சம் பார்வைகளையும், 'செல்லக்குட்டி...' பாடல் 79 லட்சம் பார்வைகளையும், 'ஜித்து ஜில்லாடி...' பாடல் 1 கோடி பார்வைகளையும், 'ஈனா மீனா டீக்கா...' பாடல் 1 கோடியே 33 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.