இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம், சில ஹீரோக்களுக்கு சில ஹீரோயின்களும், சில ஹீரோயின்களுக்கு சில ஹீரோக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது உள்ள ஹீரோக்களில் அஜித், விஜய்யைப் பிடிக்கும் என்று சொல்லும் ஹீரோயின்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை என்றும் சொல்வார்கள்.
ஆனால், தமிழ் ஹீரோயின் தமன்னா, ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கைச் சந்தித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி என பகிர்ந்துள்ளார். “ஹிரித்திக்குடன் ஒரு அற்புதமான சந்திப்பு. நீங்கள் எப்போதும், தொடர்ந்தும் ஊக்கமளித்து வருகிறீர்கள். இந்தத் தருணத்தையும், புகைப்படத்தையும் எப்போதும் கொண்டாடுவேன், மிக்க மகிழ்ச்சி,” எனக் கூறியுள்ளார். அதற்கு ஹிரித்திக்கும் 'உங்களைச் சந்தித்தது சந்தோஷம்' என பதிலளித்துள்ளார்.
தமிழில் தற்போது விக்ரம் ஜோடியாக 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. தெலுங்கிலும் முன்னணி நாயகியாக இருந்தாலும் தமன்னாவால் ஹிந்தியில் மற்றும் முன்னணிக்கு வர முடியவில்லை.