டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் 2003-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் சென்னையில் கடந்த மாதம் துவங்கப்பட்டது.
இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாமி 2 படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
த்ரிஷா இன்று (அக்.,23) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கருத்து வேறுபாடுகள் காரணமாக சாமி 2 படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். இப்படம் நன்றாக வர படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.