‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படமும் பாகுபலி படம் போன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. முக்கியமாக பாகுபலி-2 விற்கு பிறகு பிரபாஸின் பாலிவுட் மார்க்கெட் விரிவடைந்து விட்டதால், சாஹோ படத்தை இந்தி ரசிகர்களை கருத்தில் கொண்டும் உருவாக்கி வருகிறார்கள்.
அதன் காரணமாக, சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட ஐந்து பிரபல இந்தி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும், இதுவரை இந்த படம் குறித்த எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 23-ந்தேதியான இன்று பிரபாஸின் பிறந்த நாள் என்பதால், இன்று காலை சாஹோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. முக்கியமாக பிரபாஸ் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ளதாம்.