இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான கூட்டத்தில் ஒருத்தன் படம் படு தோல்வியடைந்தது. அடுத்து தற்போது அதே டைப்பான அருவி என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்தப் படத்தோடு, கார்த்தி நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தையும் தயாரித்துள்ளனர். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'சதுரங்கவேட்டை' படப் புகழ் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் படமாக , நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நவம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமாரி விநியோக உரிமையை 'ஸ்ரீராஜ் ஃபிலிம்ஸ்' வாங்கியுள்ளது. இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட இந்த படம் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.