ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மேயாத மான்'. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், டிவி நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷும் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
சிரித்தேன், ஃப்ரெண்ட்ஷிப், ஒரு தலை காதல், நண்பரின் சகோதரி... இந்த மாதிரியான ஃபார்முலாவுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு' என்று தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 'மது' என்ற பெயரில் உருவாகிய குறும்படம்தான் 'மேயாத மான்' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேயாத மான் படத்துக்கு முன்பே 75 லட்சம் சம்பளம் கேட்டார் வைபவ். இப்போது அவருடைய சம்பளம் எத்தனை லட்சங்கள் உயர்ந்துள்ளது என்று தெரியவில்லை.