கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழில் வெளியாகும் முக்கியமான படங்களை மட்டுமல்ல, பிறமொழிகளில் வெளியாகும் நல்ல படங்களையும், நண்பர்களின் படங்களையும் கூட ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டி வருவது வழக்கமான ஒன்று தான். அந்தவகையில் இந்தமுறை அவர் பார்க்க விரும்பும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மோகன்லால் நடிப்பில் வரும் அக்-27ஆம் தேதி வெளியாக இருக்கும் 'வில்லன்' திரைப்படத்தை தான். இந்த தகவலை படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனே வெளியிட்டுள்ளார்.
ரஜினி இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என விரும்புவதற்கு இது மோகன்லால் படம் என்பதையும் தாண்டி ஸ்பெஷலாக சில காரணங்கள். ஒன்று இந்தப்படம் மூலம் விஷால் முதன் முறையாக மலையாள திரையுலகில் நுழைந்துள்ளாரே, அப்படி என்ன கதையாக இருக்கும் இந்தப்படம் என்கிற ஆவல் ஒரு காரணம்.
இரண்டாவது இந்தப்படத்தை தயாரித்துள்ளவர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ரஜினியை வைத்து 'லிங்கா' படத்தை தயாரித்தவர். ரஜினியின் நண்பரும் கூட. அவரது வேண்டுகோளும் கூட ரஜினி, இந்தப்படத்தை பார்க்க விரும்பியதற்கு ஒரு காரணம் தான்.
கடந்த வருடம் இதேபோல மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தை அதன் இயக்குனர் பிரியதர்ஷன், ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.