புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தற்போது விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள தமன்னா, தெலுங்கில் குயின் ரீமேக் மற்றும் சந்தீப் கிஷனுடன் நடிக்கும் பெயரிடப்படாத படம் என நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது தாய்மொழியான ஹிந்தியில் ஹிம்மத்வாலா, என்டர்டெய்ன்மென்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது சக்ரி டோல்டி இயக்கும் காமோஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் நயன்தாரா நடித்து வரும் கொலையுதிர்காலம் படத்தின் ஹிந்தி பதிப்பாகும்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில், இதற்கு முன்பு தான் நடித்த ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த காமோஷி படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமன்னா. மேலும், ஹிந்தியில் என்னை பாதித்த இயக்குனர் கரன் ஜோகர். அவர் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வருகிறது. அந்த கனவை இந்த காமோஷி படம் வெற்றி பெற்று நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் தமன்னா.