ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே நல்ல வசூல் இருக்கும். இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல ஓப்பனிங்கைத்தான் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கிய ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.
குறிப்பாக, தமிழுக்கு மகேஷ்பாபு நேரடியாக அறிமுகம் படம் என்பதால், இந்த படத்தில் சொந்த குரலிலேயே டப்பிங் பேசிய மகேஷ்பாபு, சென்னையில் நடைபெற்ற ஸ்பைடர் இசைவிழா மற்றும் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு ஸ்பைடர் படம் குறித்து பேசினார். அதோடு, இனிமேல் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிப்பேன் என்றும் கூறினார் மகேஷ்பாபு.
ஆனால், ஸ்பைடர் தனக்கு தமிழில் நல்லதொரு ஆரம்பமாக அமையும் என்ற எதிர்பார்த்த மகேஷ்பாபுவுக்கு அந்த படம் தோல்வியடைந்து ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. மேலும், தமிழ்நாட்டில் ஸ்பைடர் படத்தின் மொத்த வசூல் ரூ.10 கோடியைகூட தொட வில்லையாம். இதனால் இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து தான் கடினமாக உழைத்தது வீணாகி விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் மகேஷ்பாபு.