'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் படம் சாஹோ. பல மாதங்கள் ஓய்வில் இருந்து வந்த பிரபாஸ், இந்த படத்திற்காக தனது கெட்டைப்பை ஸ்டைலிசாக மாற்றி நடித்து வருகிறார். அதோடு, பாகுபலி-2-வை போலவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படமும் தயாராகிறது.
குறிப்பாக, இந்த படத்திற்கு பிறகு இந்தியில் இன்னும் பலமாக காலூன்ற வேண்டும் என்பதற்காக, ஸ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ் உள்பட பல இந்தி பிரபலங்களை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் பிரபாஸ். தற்போது சாஹோ படப்பிடிப்பில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக பட்மாக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பிரபாஸ் பற்றி சாஹோ வில்லன் நீல்நிதின் முகேஷ் விடுத்துள்ள ஒரு செய்தியில், பாகுபலி-2வில் இருந்து தன்னை முழுவதுமாக வித்தியாசப்படுத்தி நடித்து வருகிறார் பிரபாஸ். துணிச்சலான நடிகரான அவர், ரொம்ப நல்ல மனிதராகவும் இருக்கிறார். அதேபோல் இந்த படத்தில் பிரபாஸ்-ஸ்ரத்தா கபூரின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக அமைந்துள்ளது என்கிறார் நீல்நிதின்முகேஷ்.