பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்துக்கு நிமிர் என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்துக்கு முன்னதாக, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் மஞ்சிமா மோகன் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படம் தான் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து பல மாதங்களாகின்றன.
சரியான ரிலீஸ் தேதி அமையாததினால் படத்தை சென்சாருக்கு அனுப்பாமல் இருந்தனர். தற்போது இம்மாதத்தின் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே 'இப்படை வெல்லும்' படத்தை சென்சாருக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர்கள் படத்திற்கு எந்த 'கட்'டும் கொடுக்கவில்லையாம்.
ஆனால் படத்திற்கு U சான்றிதழ் தராமல், 'U/A' சான்றிதழ்தான் வழங்கியிருக்கிறார்கள். மதுரை நகர பின்னணியில் 'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கௌரவ் நாராயணன், 'சிகரம் தொடு'வில் ATM கொள்ளை பற்றி சொல்லியிருந்தார்.
'இப்படை வெல்லும்' படத்தில் சாப்ட்வேர் துறை சம்பந்தப்பட்ட ஒரு கதையை கையிலெடுத்திருக்கிறார். இந்தப்படத்தில் சாப்ட்வேர் என்ஜீனியாராக நடித்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.